தேவையான பொருட்கள்
சிக்கன் – 1 கிலோ
வெங்காயம் பொடியாக நறுக்கியது – 1
தக்காளி பொடியாக நறுக்கியது – 3
வர கொத்தமல்லி – 2 தேக்கரண்டி
சீரகம் – 2 தேக்கரண்டி
மிளகு – 6
காய்ந்த மிளகாய் – 3
பூண்டு – 10 பல்
இஞ்சி – 1 1/2 ” துண்டு
நெய் – 2 மேசைக்கரண்டி
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
உப்பு – தேவைக்கேற்ப
மல்லித்தழை – அலங்கரிக்க
செய்முறை
வர கொத்தமல்லி, சீரகம், மிளகு ஆகியவற்றை எண்ணெயில்லாமல் வறுத்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.இஞ்சி, பூண்டு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.கடாயில் நெய், எண்ணெய் சேர்த்து சூடு செய்து, வெங்காயம் சேர்த்து பிரவுன் கலராகும் வரை வதக்கிக் கொள்ளவும்.இதனுடன் அரைத்த விழுது, கரகரப்பாக வறுத்து அரைத்த பொடியில் பாதி ஆகியவற்றை சேர்த்து 3 – 4 நிமிடங்கள் வரை வதக்கிக் கொள்ளவும்.பின் தக்காளி சேர்த்து நன்கு மசியுமாறு வதக்கிக் கொள்ளவும்.தக்காளி நன்கு வதங்கியவுடன், சிக்கன் சேர்த்து நன்கு வதக்கவும்.இதனுடன் மீதமுள்ள அரைத்த பொடி , அரை கப் தண்ணீர் மற்றும் மல்லித்தழை சேர்த்து வதக்கி மிதமான சூட்டில் மூடி போட்டு வேக வைக்கவும்.சிக்கன் வெந்தவுடன் அடுப்பை அணைத்து விட்டு சூடாக பரிமாறவும்.
Leave a Reply