தேவையான பொருட்கள்:
கோழி -அரைக் கிலோ வெங்காயம்-இரண்டு தக்காளி-இரண்டு இஞ்சி விழுது-ஒரு தேக்கரண்டி பூண்டு விழுது-இரண்டு தேக்கரண்டி மிளகாய்த் தூள்-ஒரு மேசைக் கரண்டி மஞ்சத்தூள்-ஒரு தேக்கரண்டி புளி-நெல்லிக்காய் அளவு கறிவேப்பிலை-ஒரு கொத்து கொத்தமல்லி தழை -ஒரு பிடி பொடிக்க: தனியா-ஒரு மேசைக் கரண்டி கசகசா-ஒரு மேசைக் க்ரண்டி சீரகம்-அரைத் தேக்கரண்டி சோம்பு-இரண்டு தேக்கரண்டி காய்ந்த மிளகாய்-ஐந்து பட்டை-ஒரு துண்டு ஏலக்காய்-மூன்று கிராம்பு-மூன்று மராட்டிமொக்கு-ஒன்று. நெய்-ஒரு மேசைக் கரண்டி எண்ணெய்-அரைக் கோப்பை உப்புத்தூள்-இரண்டு தேக்கரண்டி
செய்முறை:
அடிகனமான சட்டியில் நெய்யையும்,எண்ணையையும் கலந்து ஊற்றவும்.காய்ந்ததும் அரிந்த வெங்காயம், கறிவேப்பிலையை போட்டு நன்கு வருக்கவும். இஞ்சி, பூண்டு, பொடித்த மசாலாதூள் ஆகியவற்றை போட்டு பச்சைவாசனை போகும்வரை நன்கு வதக்கவும். பிறகு தக்காளி, உப்புத்தூள் மிளகாய்த்துள், மஞ்சத்தூள், ஆகியவற்றை போட்டு நன்கு கிளறி விடவும். கோழித் துண்டுகளை போட்டு கிளறி விட வேண்டும். ஐந்து நிமிடங்கள் கழித்து நன்கு கிளறி விட்டு ஒருக் கோப்பை புளி தண்ணீறை ஊற்றி கொதிக்க விடவும்.மிதமான தீயில் வைக்கவும்.குழம்பு கெட்டியான உடன் கொத்தமல்லியை தூவி இறக்கிவிட்டு, கடாயில் போட்டு சூடாக பரிமாறவும்.
Leave a Reply