தேவையானப் பொருட்கள்:
சிக்கன் – கால்கிலோ (முள் இல்லாததாக இருக்கனும் வெங்காயம் – பாதி(பெரியது பச்சைமிளகாய்- 3 பூண்டு பேஸ்ட் – 1 தேக்கரண்டி முட்டை- 2 மைதா- 150 கிராம் கொத்தமல்லி இலை- சிறிது மசலாதூள் – 2 மேசைக்கரண்டி மஞ்சள்தூள்- 1 தேக்கரண்டி உப்பு – தேவையான அளவு எண்ணெய் – 2 தேக்கரண்டி ரஸ்க்தூள் – 150 கிராம் எண்ணெய் – பொறிக்க
செய்முறை:
முதலில் கறியில் மசலாதூள்,மஞ்சள் தூள், உப்பு போட்டு தண்ணீர் ஊற்றி நன்கு வேக வைத்துக்கொள்ளவும். ஒரு கடாயில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு பேஸ்ட் போட்டு வதங்கியதும், கறியில் தட்டி நன்றாக பிசைந்து, உப்பு, கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு பிசைந்து வைக்கவும். பின்பு மைதா, முட்டை இரண்டையும் சேர்த்து நன்கு அடித்து அதில் கறியை கட்லெட் வடிவத்தில் தட்டி ரஸ்க்தூளில் புரட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
Leave a Reply