சிக்கன் கைமா ரொட்டி

தேவையானப் பொருட்கள்:

கோதுமை மாவு – 200 கிராம்,
சிக்கன் கைமா – 1/4 கிலோ,
மிளகாய்த்தூள் – 2 தேக்கரண்டி,
கரம் மசாலா தூள் – 1 தேக்கரண்டி,
தக்காளி சாஸ் – 1 தேக்கரண்டி,
சோயா சாஸ் – 1 /2 தேக்கரண்டி,
இஞ்சி, பூண்டு விழுது – 1 தேக்கரண்டி,
எண்ணெய் – 4 மேசைக்கரண்டி.
உப்பு – தேவையான அளவு.

 செய்முறை:

சிக்கனை சுத்தமாக கழுவி, சிறிது உப்பு சேர்த்து, ஆவியில் வேக வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்தவுடன் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். கரம் மசாலா, மிளகாய் தூள், வேக வைத்த சிக்கன், சாஸ் வகைகள் சேர்த்து, கிளறி இறக்கவும். அத்துடன் கோதுமை மாவு, மீதி உப்பு சேர்த்து நன்கு பிசையவும். எழுமிச்சையளவு உருண்டைகளாக எடுத்து, லேசாக மாவு தொட்டு, சிறிது மொத்தமாக தேய்த்து, தோசைக்கல்லில் இருபுறமும் எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *