தேவையானப் பொருட்கள்:
கோழிக்கறி – 1/4 கிலோ, இஞ்சி, பூண்டு விழுது – 1 தேக்கரண்டி, மிளகுத்தூள் – 1 தேக்கரண்டி, சீரக்த் தூள் – 1 தேக்கரண்டி, மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி, தேங்காய் துருவல் – 4 மேசைக்கரண்டி, கார்ன்ஃபிளார் – 2 தேக்கரண்டி, எலுமிச்சம் பழம் – 1/2 மூடி, உப்பு – தேவையான அளவு, எண்ணெய் – 2 மேசைக்கரண்டி,
செய்முறை:
கோழியை சுமாரான துண்டுகளாக வெட்டி, சுத்தம் செய்யவும். தேங்காயை மிக்ஸியில் போட்டு ஒரு ஓட்டு ஓட்டி நைசாக பொடிக்கவும். சிக்கனுடன் எல்லாப் பொருட்களையும் கலந்து எலுமிச்சை சாறு பிழிந்து 2 மணி நேரம் ஊற விடவும். எல்லாத்துண்டுகளையும் தேங்காய் பொடியில் புரட்டி ஒரு தட்டில் வைத்து, ஓவனில் 5 நிமிடம் வைக்கவும். திருப்பி விட்டு மீண்டும் 4 நிமிடம் வைக்கவும். இல்லையேல் கபாப் கம்பியில் குத்தி தணலில் சுடவும்.
Leave a Reply