தேவையான பொருட்கள்; சிக்கன் – முக்கால் கிலோ
உருளை – 300கிராம்
தக்காளி – 200 கிராம்
வெங்காயம் – 200 கிராம்
பச்சை மிளகாய் – 3
இஞ்சி பூண்டு – 3 டீஸ்பூன்
கரம் மசாலா – அரைஸ்பூன்
சில்லிபவுடர் – 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் -அரைஸ்பூன்
மல்லி இலை – சிறிது
தயிர் – 1 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் – 5 டேபிள்ஸ்பூன்
தேங்காய் – 3 டேபிள்ஸ்பூன்
முந்திரி – 6 பருப்பு
உப்பு – தேவைக்குசிக்கனை சுத்தம் செய்து கட் செய்து கழுவி எடுத்து நீர் வடித்து கொள்ளவும்.பின்பு அத்துடன் தயிர்,மஞ்சள் தூள்,ஒரு டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது,சிறிது சேர்த்து கலந்து வைக்கவும். குக்கரில் எண்ணெய் விட்டு காய்ந்ததும்,வெங்காயம் வதக்கி சிவந்ததும்,இஞ்சி பூண்டு,கரம் மசாலா போட்டு வதக்கவும்,பின்பு மல்லி இலை ,மிளகாய்,தக்காளி ,மிள்காய்த்தூள்,உப்பு சேர்த்து வதக்கி சிறிது சிம்மில் மூடி வைக்கவும்.தக்காளி மசிந்து இப்படி கூட்டு பதம் வரும்.அத்துடன் ரெடி செய்து வைத்த சிக்கனை சேர்க்கவும்.பின்பு நன்கு பிரட்டி விடவும்.கவனம் தண்ணீர் சேர்க்கக்கூடாது.அத்துடன் சிறிது நேரம் கழித்து நறுக்கிய உருளை சேர்க்கவும்.ஒரு கப் தண்ணீர் சேர்த்து பிரட்டி குக்கரை மூடி இரண்டே விசில் வைக்கவும்.ஆவியடங்கியதும் குக்கரை திறந்தால் பக்குவமாக சிக்கன்,உருளை வெந்து இருக்கும்.பின்பு அரைத்த தேங்காய் விழுது சேர்க்கவும்.கொதி வரவும் சிம்மில் வைக்கவும். குழம்பு கெட்டிதன்மை ருசிக்கு தகுந்த படி இரண்டு கப் தண்ணீர் தேங்காயுடன் சேர்க்கலாம்.தேங்காய் வாடை மடங்கி எண்ணெய் மெலெழும்பி வரும்.அடுப்பை அணைக்கவும். சுவையான சிக்கன் சால்னா ரெடி.
குறிப்பு :
ஒன்லி சில்லி பவுடர்,இஞ்சி பூண்டு கரம்மசாலா தான்.காரம் அதிகம் வேண்டும் என்றால் சில்லி பவுடர் அரைஸ்பூன் கூட்டி கொள்ளவும்.ஆனால் ருசியோ சூப்பர்.புலாவ்,பரோட்டா,நாண்,சப்பாத்தி,இட்லி,தோசை,ஆப்பம்,ரொட்டி வகைகள் அனைத்திற்கும் பொருத்தமான ஒரே சால்னா.
Leave a Reply