தேவையான பொருட்கள் ;
சிக்கன் – 1 கிலோ (ஷான்) சிக்கன் டிக்கா பார்பிகியு மசாலா – 2 டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன் தயிர் – 200 மில்லி கசூரி மேத்தி – 2-3 டேபிள்ஸ்பூன் ஆலிவ் ஆயில்- 2 டேபிள்ஸ்பூன் உப்பு – சிறிதுசெய்முறை:
சுத்தம் செய்து கட் செய்த சிக்கன்,மசாலா,இஞ்சி பூண்டு,தயிர்,சிறிது சுவைக்கு உப்பு, ஆலிவ் ஆயில் சேர்த்து பிரட்டி கசூரி மேத்தி பவுடர் சேர்த்து குறைந்தது 4 மணி நேரம் ஊறவைக்கவும். பார்பிகியு அடுப்பு ரெடியானவுடன் கம்பியில் அடுக்கியோ அல்லது கம்பி தட்டில் வைத்தோ இரு புறமும் சிவற வெந்து மணம் வர சுட்டு எடுக்கவும். விரும்பினால் லைம் பிழிந்து சாப்பிடலாம்.
Leave a Reply