தேவையானப் பொருட்கள்:
சிக்கன் – 1/4 கிலோ, பச்சை மிளகாய் – 3, சின்ன வெங்காயம் – 1 கைப்பிடி, சீரகம் – 1 தேக்கரண்டி, புதினா – 1கைப்பிடி, இஞ்சி – சிறிது, பூண்டு – 4 பல், கொழுப்பு நீக்கிய தயிர் – 1மேசைக்கரண்டி, கொத்தமல்லி தழை – 1 கைப்பிடி, எண்ணெய் – 2 தேக்கரண்டி, உப்பு – தேவையான அளவு.செய்முறை:
சிக்கனை சுத்தம் செய்து கொழுப்பு,தோல் இல்லாமல் ஆவியில் 10 நிமிடம் வேகவைத்து எடுக்கவும். வாணலியில் 1 தேக்கரண்டி எண்ணெய் விட்டு சீரகம், பச்சை மிளகாய், புதினா, கொத்த மல்லி, இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி கரகரப்பாக அரைக்கவும். வாணலியில் மீதி எண்ணெயை ஊற்றி அரைத்த விழுது, சிக்கன் சேர்த்து வதக்கவும்.வதங்கிய பின் தயிர், உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து வதக்கி 10 நிமிடம் வேக விட்டு இறக்கவும்.
Leave a Reply