தேவையான பொருட்கள்:
முள்ளங்கி – கால் கிலோ பருப்பு – 100 கிராம் எலும்பு சிக்கன் துண்டு – கால் கிலோ தக்காளி – 100கிராம் வெங்காயம் – 100கிராம் பச்சை மிளகாய் – 1 மல்லி,புதினா கருவேப்பிலை – சிறிது இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2டீஸ்பூன் மஞ்சள் தூள் – கால்டீஸ்பூன் கரம் மசாலா – கால் டீஸ்பூன் கறி மசாலாத்தூள் அல்லது கலந்த மிளகாய்த்தூள்- 2 டீஸ்பூன் எண்ணெய் – 4 டீஸ்பூன் கடுகு,உளுத்தம் பருப்பு – 1டீஸ்பூன் மிளகாய் வற்றல் – 2 உப்பு – தேவைக்கு.தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்.நறுக்கி ரெடி செய்து கொள்ளவும்.ஊறிய பருப்பை தேவைக்கு தண்ணீர் சேர்த்து கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து 2-3 விசில் குக்கரில் வைத்து எடுக்கவும்.முக்கால் பததில் வெந்த பருப்போடு,சிக்கன் துண்டுகள், நறுக்கிய வெங்காயத்தில் பாதி,தக்காளி,பச்சை மிளகாய்,நறுக்கிய மல்லி புதினா சிறிது, இஞ்சி பூண்டு பேஸ்ட்,கரம் மசாலா,கறிமசாலா தேவைக்கு சிறிது தண்ணீர் உப்பு சேர்த்து வதக்கவும்.கலந்து விட்டு குக்கரை மூடி வெயிட் போட்டு ஒரு விசில் வரவும் அடுப்பை அணைக்கவும்.வெந்த சிக்கன் முள்ளங்கி தால்ச்சா இப்படி இருக்கும்.உப்பு சரி பார்க்கவும்.ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு,உளுத்தம் பருப்பு,மிளகாய் வற்றல்,கருவேப்பிலை போட்டு தாளித்து மீதி வெங்காயத்தை போட்டு வதக்கவும்.இளஞ்சிவப்பாக வெங்காயம் சிவந்ததும் ரெடியான தாள்ச்சாவில் சேர்த்து கலந்து விடவும்.சுவையான சிக்கன் முள்ளங்கி தாள்ச்சா ரெடி.
Leave a Reply