சிக்கன் குஸ்கா

தேவையான பொருள்கள்:

பாஸ்மதி அரிசி (Basmathy Rice) – 500g 
சிக்கன் (Chicken)250g
தக்காளி (Tomatoes)- 250g
வெங்காயம் (Onion) – 02 
பெரிய வெங்காயம் – 01
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 Tea Spoon
தயிர் (Curd) -100g

கறிவேப்பிலை (Curry Tree) – சிறிதளவு

பச்சை மிளகாய் (Chili) – 02

பட்டை (Cinnamon) – 02

ஏலக்காய் (Cardamom) -02

கிராம்பு (Clove) -02

சிறுபருப்பு-100g

கொத்துமல்லி (Coriander) – சிறிதளவு

புதினா இலை (Mint Leaf)– சிறிதளவு

பிரியாணி மசாலா தூள்  – 02 Tea Spoon

எண்ணெய் (Cooking Oil) – தேவையான அளவு

நெய் (Gee) – தேவையான அளவு

உப்பு (Salt) – தேவையான அளவு

மீல் மேக்கர் (Meal Maker)- 25g

எலுமிச்சைச் சாறு (Lemon Juice) – சிறிதளவு
செய்முறை:

முதலில் அரிசியை களைந்து அரைமணிநேரம் ஊற வைக்கவும். பெரிய வெங்காயம், தக்காளி இரண்டையும் நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தக்காளி முழுகும் அளவிற்கு தண்ணீர் வைத்து கொதிக்க விடவும். பிறகு ஆறவைத்து தோல் எடுத்து மிக்சியில் அரைத்து வைத்து கொள்ளவும். .பட்டை, கிராம்பு, ஏலக்காய், சின்ன வெங்காயம் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். இஞ்சி, பூண்டு இரண்டையும் மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்து 3 தேக்கரண்டி எடுத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் தயிருடன் அரைத்து வைத்த இஞ்சி, பூண்டு விழுது, பட்டை,  கிராம்பு , ஏலக்காய் விழுது சேர்த்து கரைத்து வைத்துக் கொள்ளவும்.

குக்கரில் எண்ணெய் மற்றும் 2 மேசைக்கரண்டி நெய் ஊற்றி காய்ந்ததும்  கறிவேப்பிலை  போட்டு தாளித்து, பிறகு நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், புதினா, கொத்தமல்லி சேர்த்து 3 நிமிடம் வதக்கவும். பிறகு தயிர் கலவையை ஊற்றி 2 நிமிடம் நன்கு கிளறி உப்பு போடவும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடானதும் அதில் மீல்மேக்கரை போட்டு 3 நிமிடம் கழித்து பிழிந்து எடுத்துக் கொள்ளவும். உப்பு போட்டு கிளறிய பிறகு 3 கப் பால் மற்றும் 2 கப் தண்ணீர் ஊற்றி மீல் மேக்கரை போட்டு கிளறி விடவும். கொதித்து பொங்கும் போது ஊற வைத்த அரிசியை போட்டு அவ்வபோது கிளறி விட்டு 10 நிமிடங்கள் வேக விடவும்.

10 நிமிடம் கழித்து அரிசி முக்கால் பதம் வெந்ததும் மேலே பிழிந்த எலுமிச்சை சாற்றைப் ஒற்றி , கிளறிவிட்டு குக்கரை மூடி,  மிதமான தீயில் வைக்கவும். பிறகு 8 நிமிடம் கழித்து இறக்கி, மேலே கொத்தமல்லித் தழை தூவி கிளறி விடவும்.

 

 

 

 

35 முந்திரி சிக்க‌ன் குருமா



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *