தேவையானப் பொருட்கள்:
கோழி இறைச்சி – அரைக் கிலோ பிஸ்தா – அரை கப் பெரிய வெங்காயம் – 2 இஞ்சி – ஒரு அங்குலத்துண்டு பூண்டு – 5 பல் மல்லித்தூள் – 2 மேசைக்கரண்டி வெள்ளை மிளகுத்தூள் – அரை தேக்கரண்டி கரம் மசாலாத்தூள் – அரை தேக்கரண்டி தயிர் – அரை கப் ப்ரஷ் க்ரீம் – அரை கப் பச்சை மிளகாய் – 4 எண்ணெய் – 4 மேசைக்கரண்டி உப்பு – தேவையான அளவு
செய்முறை:
எலும்பில்லாத கறியாக அரைக் கிலோ எடுத்துக் கொள்ளவும். அவற்றை நன்கு கழுவி சுத்தம் செய்து ஒன்றரை அங்குல துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தை தோலுரித்து கழுவி கொண்டு, நான்காக அரிந்து ஒரு கோப்பை நீரில் வேகவைத்து எடுக்கவும். வேக வைத்து எடுத்த வெங்காயத்தை விழுதாக அரைத்துக் கொள்ளவும். இஞ்சி பூண்டினை தோலுரித்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். தயிரினை நன்கு அடித்து தனியே வைத்துக் கொள்ளவும். பிஸ்தா பருப்புகளை ஒரு கோப்பை வெந்நீரில் சுமார் 10 நிமிடங்கள் ஊறவைத்து எடுத்து தோலுரித்து கொள்ளவும்.பச்சை மிளகாயை கழுவி, தண்டுகளை நீக்கி நறுக்கிக் கொண்டு பிஸ்தாவுடன் சேர்த்து சிறிது நீரும் சேர்த்துக் கொண்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி அரைத்து வைத்துள்ள வெங்காய விழுதினைப் போட்டு மூன்று நிமிடங்களுக்கு எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும். இத்துடன் இஞ்சி பூண்டு விழுதினையும் சேர்த்து வதக்கவும். அத்துடன் மல்லித்தூள், வெள்ளை மிளகுத்தூள், உப்பு சேர்த்து நன்கு கலக்கி வேகவிடவும். பிறகு பிஸ்தா, மிளகாய் விழுதினையும் இத்துடன் சேர்த்து கலக்கி ஒரு நிமிடம் வேகவிடவும். கோழித் துண்டங்களை சேர்த்து நன்கு பிரட்டி சுமார் 3 நிமிடங்களுக்கு வதக்கவும். பிறகு ஒரு கோப்பை தண்ணீர் விட்டு, தீயைக் குறைத்து வைத்து வேகவிடவும். கோழி இறைச்சி நன்கு வெந்து மிருதுவானவுடன், தயிரினைக் கலந்து மேலும் இரண்டு நிமிடங்களுக்கு வேக விடவும். அவ்வபோது கிளறி விடவும். இறுதியாக ப்ரஷ் கிரீமினை சேர்த்துக் கிளறி, கரம் மசாலாத் தூளினைத் தூவி, இறக்கி, சூடாகப் பரிமாறவும். பொடியாக நறுக்கின பிஸ்தாவினை மேலே தூவி அலங்கரித்துக் கொள்ளலாம்.
Leave a Reply