பேச்சிலர்ஸ் சிக்கன் சில்லி ப்ரை

தேவையான பொருட்கள்:

போன்லெஸ் சிக்கன் – 300 கிராம்

மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்

கரம் மசாலா – கால் டீஸ்பூன்

எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்

நறுக்கிய வெங்காயம் – 100 கிராம்

இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்

பச்சை மிளகாய் – 2

நறுக்கிய தக்காளி – 100 கிராம்

மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்

நறுக்கிய மல்லி இலை – 2 டேபிள்ஸ்பூன்

உப்பு – தேவைக்கு.

 

முதலில் சிக்கனை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி நன்கு அலசி,தண்ணீர் வடிகட்டி,மஞ்சள் தூள்,கரம் மசாலா,உப்பு சேர்த்து விரவி வைக்கவும்.வாணலியில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம் வதக்கவும்.நன்கு வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்க்கவும். நன்கு வதக்கவும்.பின்பு அத்துடன் நறுக்கிய பச்சை மிளகாய்,தக்காளி,சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்.. அத்துடன் விரவி வைத்த சிக்கனை சேர்க்கவும்.பிரட்டி விடவும்.மிளகாய்த்தூள் சேர்க்கவும்.சிக்கனில் தண்ணீர் ஊறும்.சிறிது மூடி வேக விடவும். நன்கு வெந்ததும் தண்ணீர் சுண்டி ட்ரையாக வர வேண்டும்.நறுக்கிய மல்லி இலை சேர்க்கவும்.பிரட்டி விடவும்.அடுப்பை அணைக்கவும்.  சுவையான சிக்கன் சில்லி ஃப்ரை ரெடி.இதனை சாதம் வகைகளுடன் பரிமாற அருமையாக இருக்கும்.சிக்கன் எலும்போடு உள்ள துண்டுகளை குழம்பு வைத்து விட்டு எலும்பில்லாத நெஞ்சுப் பகுதியை இப்படி வைத்து அசத்தலாம்.

 

 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *