தேவையான பொருட்கள் :
கோழி இறைச்சி 1 கிலோ தண்ணீர் 4 கப் அரைத்த முந்திரி 150 கிராம் தக்காளி சாஸ் 1/2 கோப்பை மிளகாய் வற்றல் 4 இஞ்சி, பூண்டு விழுது 2 தேக்கரண்டி தனியா தூள் 2 தேக்கரண்டி சீரகத் தூள் 2 தேக்கரண்டி மிளகாய் தூள் 2 தேக்கரண்டி எண்ணெய் 2 மேசைக்கரண்டி வறுத்த முந்திரி 10 உப்பு தேவைக்கேற்ப வேகவைத்து ஸ்லைஸ்° செய்த முட்டை- 2
செய்முறை:
4 கோப்பை தண்ணீரில் கோழி இறைச்சியை வேகவைக்கவும். தண்ணீர் சுண்டி, ஒரு கோப்பையாக மாறியவுடன் இறைச்சியையும் மீதமுள்ள தண்ணீரையும் இறக்கி வைக்கவும். எண்ணெயை சூடாக்கி, அதில் அரைத்த முந்திரி, தனியா தூள், சீரகத்தூள், மிளகாய்தூள், உப்பு, மிளகாய் வற்றல் இவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும்.வேகவைத்த கோழி இறைச்சியை (மீதமுள்ள தண்ணீருடன்) சேர்த்து குறைந்த தீயில் சமைக்கவும். அதில் தக்காளி சாஸை சேர்த்து 10 நிமிடம் சமைக்கவும்.ஸ்லைஸ் செய்த முட்டை மற்றும் வறுத்த முந்திரியை மேலே தூவி அழகு படுத்தி பரிமாறவும்.
Leave a Reply