தேவையான பொருட்கள்
கோழி கறி – எலும்பில்லாதது 1/2 கிலோ தேங்காய் பால் – 1/4 டின் பச்சை மிளகாய் – 10 சின்ன வெங்காயம் – 8 இஞ்சி பூண்டு விழுது – 1 மேசைக்கரண்டி முழு முந்திரிப் பருப்பு – 12 கொத்தமல்லி தூள் – 2 தேக்கரண்டி புளிப்பில்லாத தயிர் – 3 மேசைக் கரண்டி எண்ணெய் – 3 மேசைக்கரண்டி நெய் – 2 மேசைக்கரண்டி உப்பு – தேவையான அளவு கருவா – சிறிய துண்டு கிராம்பு – 2 ஏலம் – 3 ரம்பை இலை – சிறிய துண்டு
செய்முறை:
கறியை சுத்தம் செய்து அதில் பச்சை மிளகாயை இரண்டாக கீறி போடவும். சிறிது இஞ்சி பூண்டு விழுது, தயிர், உப்பு சேர்த்து நன்றாக பிரட்டி தேங்காய் பால் ஊற்றி சிறிது நேரம் ஊற வைக்கவும். முந்திரிப் பருப்பை மிக்ஸியில் அரைத்து தனியே வைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய், நெய் ஊற்றி சூடானதும் கருவா, கிராம்பு, ஏலம், நறுக்கிய வெங்காயம் போடவும். இதில் இஞ்சி பூண்டு விழுது, தயிர், ரம்பை இலை சேர்த்து தாளிக்கவும். பின் சேர்த்து வைத்துள்ள கறியை போட்டு கிளறவும். இப்போது கொத்தமல்லி தூள் சேர்த்து கொள்ளவும். மிதமான தீயில் 5 நிமிடங்கள் வேக விடவும்.அரைத்து வைத்துள்ள முந்திரிப் பருப்பு விழுதை சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.கறி வெந்து நெய் மிதக்க ஆரம்பித்ததும் இறக்கி விடவும்
Leave a Reply