தேவையானப் பொருட்கள்;
சுத்தம் செய்த கோழி(எலும்பு அதிகமுள்ள நெஞ்சுப் பகுதி அல்லது கோழி Frame)-250 கிராம் பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கவும்) தக்காளி – 3 (துண்டுகளாக்கவும்) இஞ்சிப்பூண்டு பேஸ்ட்- 1ஸ்பூன் மஞ்சள் தூள்- 1/4 டீஸ்பூன் உப்பு- 1ஸ்பூன் மிளகுத்தூள்- 1 ஸ்பூன் மல்லித் தூள்- 1/2 ஸ்பூன் பெருஞ்சீரகம்(சோம்பு)- 1/2 ஸ்பூன் பட்டை – 1சிறிய துண்டு கிராம்பு- 3 தண்ணீர்- 3 கப் எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழை – 2 ஸ்பூன் அளவு
செய்முறை:
ஒரு சிறிய குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு, பட்டை, கிராம்பு போட்டு தாளிக்கவும். ஒரு ஸ்பூன் அளவு நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும். சிக்கன், மீதமுள்ள வெங்காயம் மற்றும் அனைத்துப் பொருட்களையும் போட்டு தண்ணீர் ஊற்றி கலந்து குக்கரை மூடவும். ஒரு விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும். பிறகு குக்கரைத் திறந்து கொத்தமல்லி தழையை தூவவும். சூப் ரெடி.
Leave a Reply