சிக்கன் டிக்கா சோயா மசாலா (இந்திய சீன முறை)

தேவையான பொருட்கள் :

சிக்கன் – எலும்பு இல்லாதது 1/2கிலோ
தயிர் – ஒரு மேசை கரண்டி
மிளகாய்பொடி – 2tsp
மஞ்சள்பொடி – 1tsp
இஞ்சி பூண்டு அரைத்தது   -1 1/2 மேசை கரண்டி
உப்பு – தேவையான அளவு
கரம் மசாலா -1tsp
சோயா சாஸ்  – 1  1/2 மேசை கரண்டி
வெங்காயம் மிகவும் பொடியாக நறுக்கியது – 2 மேசை கரண்டி
சோள    மாவு அல்லது மைதா மாவு – 2tsp
எண்ணை –  தேவையான அளவு

செய்முறை:

முதலில் சிக்கனில் தயிர்,இஞ்சி பூண்டு ஒரு மேசை கரண்டி,மஞ்சள்பொடி ,கரம் மசாலா, மிளகாய்பொடி,தேவையான அளவு உப்பு போட்டு நன்கு பிசைந்து ஒரு மணி நேரம் ஊரவிடவும்.ஒரு மணி நேரம் கழித்து, ஒரு தோசை சட்டி அல்லது அகலமான தவாவில் மூன்று  மேசை கரண்டி எண்ணை விட்டு சிக்கனை பரவலாக அதில் வைத்து, நன்கு வேகும் வரை இரண்டு பக்கமும் திருப்பி விட்டு   வேக விடவும்.

வேறு ஒரு வாணலியில் ஒரு மேசை கரண்டி எண்ணை விட்டு , முதலில் வெங்காயம் இட்டு  வதங்கியதும் இஞ்சி பூண்டு அரை மேசை கரண்டி போட்டு வதக்கவும். பிறகு அதில் சோயா சாஸ், அதனுடன் இரண்டு மேசை கரண்டி தண்ணீரும் விட்டு  வேக விடவும்.

ஒரு இரண்டு நிமிடம் கழித்து, வேகவைத்த சிக்கனை அதில் இட்டு  நன்கு கலந்து விடவும், தேவைப்பட்டால் சிறிது உப்பு சேர்த்து கொள்ளலாம்.  சிக்கன் அதில் ஒரு இரண்டு  நிமிடம் வெந்தவுடன்,  சோயா மாவு அல்லது மைதா மாவை ஒரு மேசை கரண்டி தண்ணீரில் கலந்து அதில் சேர்க்கவும். கலவை நன்கு கெட்டியாக ஆனவுடன் அடுப்பை அணைக்கவும். சிக்கன் டிக்கா சோயா மசாலா தயார்.

 

 

 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *