தேவையான பொருட்கள் :
கோழிக்கறி – 1/2 கிலோ, பெரிய வெங்காயம் – 3, தக்காளி – 3, இஞ்சி, பூண்டு விழுது – 2 தேக்கரண்டி, மிளகாய்த்தூள் – 2 தேக்கரண்டி, மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி, தனி தூள் – 3 தேக்கரண்டி, சீரகத்தூள் – 1தேக்கரண்டி, சோம்புதூள் – 1 தேக்கரண்டி, தேங்காய் – 1 மூடி, கசகசா – 2 தேக்கரண்டி, முந்திரி – 10, பொட்டுக்கடலை – 1 கைப்பிடி, உப்பு – தேவையான அளவுதாளிக்க
எண்ணெய் – 3 ஸ்பூன், பட்டை – சிறிது, கிராம்பு – 3, அன்னாசிப்பூ – 2, சோம்பு – 1/2 தேக்கரண்டி,
செய்முறை:
கோழியை பெரிய துண்டுகளாக வெட்டி, சுத்தம் செய்யவும். தேங்காய், முந்திரி, கசகசா, பொட்டுக்கடலையை நைசாக அரைத்து வைக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும். தக்காளியையும் பொடியாக நறுக்கி வைக்கவும். மிளக்கயை இரண்டாகக் கிள்ளி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை போட்டு தாளிக்கவும். பிறகு நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது, தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி கரையும் வரை நன்கு வதக்கவும். நல்ல வாசனை வந்தவுடன் கோழிக்கறி சேர்த்து வதக்கவும்.
கோழிக்கறி நன்கு வதங்கிய பின்னர் மிளகாய்த் தூள், தனியா தூள், சீரகத்தூள், சோம்புத்தூள், மஞ்சள் தூள்,உப்பு சேர்த்து கிளறவும். ஒரு கப் தண்ணீர் சேர்த்து மூடி வைக்கவும். கோழிக்கறி முக்கால் பதம் வெந்ததும் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து நன்கு வேக விடவும். கோழிக்கறி முழுவதும் வெந்த பின் இறக்கவும்
Leave a Reply