தேவையான பொருட்கள்:
சிக்கன்- 1/2 கிலோ வெங்காயம் – 1 தக்காளி – 1 பச்சை மிளகாய் – 1 மஞ்சள் தூள் – 1/4ஸ்பூன் உப்பு-3/4 ஸ்பூன் கறிவேப்பிலை-சிறிது கொத்தமல்லி-சிறிது எண்ணெய் -3 ஸ்பூன் தேங்காய் பால் – 1 கப் இஞ்சி பூண்டு பேஸ்ட்-1 ஸ்பூன் வறுத்து அரைக்க மிளகாய் வற்றல் – 3 மல்லி விதை – 1 ஸ்பூன் மிளகு – 1 ஸ்பூன் பட்டை – 1 கிராம்பு – 3 ஏலக்காய் – 2
செய்முறை:
வறுத்து அரைக்க வேண்டியவற்றை வெறும் கடாயில் வறுத்து அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயம், கருவேப்பிலை சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும். பின் தக்காளி சேர்த்து வதக்கவும், தக்காளி வதங்கியதும் சிக்கன் சேர்த்து பிரட்டி மூடி வேக விடவும். கோழி பாதி வெந்ததும் அரைத்த மசாலா, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து மூடி வேக விடவும். சிக்கன் வெந்ததும் தேங்காய் பால் சேர்த்து கொதித்து எண்ணெய் பிரியும் போது கொத்தமல்லி தூவி எடுக்கவும்.
Leave a Reply