தேவையான பொருட்கள் ;
போன்லெஸ் சிக்கன் – 600 கிராம்
புதினா – ஒரு கைபிடி
பச்சை மிள்காய் – 2
இஞ்சி துருவல் – 1 டீஸ்பூன்
பூண்டு – 4 பல்
கரம் மசாலா – அரைஸ்பூன்
தயிர் – 100 மில்லி
உப்பு – தேவைக்கு
ஆலிவ் ஆயில் – 1டேபிள்ஸ்பூன்
செய்முறை:
புதினா,மிளகாய்,உப்பு,இஞ்சி பூண்டு,கரம்மசாலா சேர்த்து அரைத்து கொள்ளவும். அரைத்தவற்றுடன் தயிர் சேர்க்கவும்.ரெடி செய்த கலவையை ,சுத்தம் செய்து கட் செய்து கழுவி, நீர் வடிகட்டிய சிக்கனில் சேர்க்கவும். குறைந்தது 4 மணி நேரம் ஊறவைக்கவும். டிக்கா ஸ்டிக்கில் அடுக்கி வைக்கவும். பார்பிகியு அடுப்பில் கங்கு ரெடியானவுடன் ரெடி செய்த சிக்கன் ஸ்டிக்கை செய்ததை வைக்கவும். திருப்பி திருப்பி வைத்து வெந்து மணம் வரவும் சுட்டு எடுக்கவும். மிண்ட் சிக்கன் பார்பிகியு ரெடி.
Leave a Reply