தேவையான பொருட்கள் :
சிக்கன் – ஒரு கிலோ
மல்லிப்பொடி – 3tsp
மிளகுபொடி – 1tsp
சீரகபொடி – 2tsp
மிளகாய்பொடி – 1tsp
மஞ்சள்பொடி – 1/4tsp
கரம்மசாலா – 1/2tsp
உப்பு – தேவையான அளவு
எண்ணை – 2tbsp
செய்முறை:
முதலில் சிக்கனை சிறு சிறு துண்டுகளாக வெட்டி கொள்ளவும். பின்பு சுத்தம் செய்த சிக்கன் துண்டுகளை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு, அதில் அனைத்து பொடிகளையும் போட்டு ஒரு மணி நேரம் ஊரவிடவும். ஒரு வாணலியில் எண்ணைவிட்டு காய்ந்ததும், சிக்கனை போட்டு மூடி போட்டு வேக விடவும். தண்ணீர் சேர்க்க வேண்டாம். சிக்கனில் இருந்து விடும் தண்ணீரிலேயே சிக்கன் வெந்து விடும்.அடுப்பை குறைவான தணலில் வைத்து இருக்கவும். சிக்கன் நன்கு வெந்து தண்ணீர் வற்றியவுடன் அடுப்பை அனைத்து விடவும். இப்போது சுவையான சிக்கன் தயார், இது ரசம் சாதம், மற்றும் அனைத்து கலந்த சாதங்களுக்கும் மிகவும் பொருத்தமாக இருக்கும்.
Leave a Reply