தேவையான பொருட்கள்
எலும்பு நீக்கிய சிக்கன் துண்டுகள் – கால் கிலோ
முட்டை – 1
பொட்டுக்கடலை மாவு – 3 டேபிள்ஸ்பூன்
நறுக்கிய வெங்காயம் – 2 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
நறுக்கிய மல்லி இலை- 2 டேபிள்ஸ்பூன்
நறுக்கிய புதினா – 1 டேபிள்ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
மிளகுத்தூள் – அரை டீஸ்பூன்
மஞ்சள்,சீரக,சோம்பு,கரம்மசாலா – தலா கால்டீஸ்பூன்
எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு.
உப்பு – தேவைக்கு.
(பரிமாறும் அளவு – 4 நபர்களுக்கு.)
சிக்கன் துண்டுகளை நன்கு கழுவி தண்ணீர் வடிகட்டி, உப்பு,மஞ்சள் தூள்,இஞ்சி பூண்டு சேர்த்து வேக வைத்து ஆற வைக்கவும்.பொட்டுக்கடலையை பொடித்து கொள்ளவும்.வேக வைத்த சிக்கனை மிக்ஸியில் இரண்டு சுற்று சுற்றி எடுக்கவும். அடுத்து மிக்ஸியில் வெங்காயம்,பச்சை மிளகாய்,புதினா, மல்லி இலையையும் பர பரவென்று சுற்றி எடுக்கவும்.அரைத்த சிக்கன், பொட்டுக்கடலை மாவு, முட்டை, அரைத்த வெங்காயம்,மல்லி,புதினா,பச்சை மிளகாய் விழுது,மிளகு,சீரக,சோம்பு,கரம் மசாலா தூள்களை சேர்க்கவும்.தேவைக்கு உப்பு சேர்த்து கெட்டியாக பிசைந்து வைக்கவும். அவற்றை சிறு உருண்டைகளாக்கி கொள்ளவும்.கடாயில் தேவைக்கு எண்ணெய் விட்டு நன்கு காயவும் கோலா உருண்டைகளை மிதமான தீயில் சிவற பொரித்து எடுக்கவும்.பொரிக்கும் பொழுது எண்ணெய் அவ்வளவாக குடிக்காது.சுவையான சிக்கன் கோலா உருண்டை ரெடி. இதனை அப்படியே பண்டம் போல் சாப்பிடலாம், சைட் டிஷ் ஆகவும் பரிமாறலாம்.சிறு குழந்தைகளும் போட்டி போட்டி கொண்டு சாப்பிடுவார்கள்.கோலா உருண்டை உள்ளே சாஃப்டாக வெளியே கிரிஸ்பாக இருக்கும்.
Leave a Reply